என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாய் புகார்"
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர்.
2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து அவரது தாயாரிடம் கூறினார்கள்.
மாணவிகளின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த வாலிபர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
தேனி:
தேனி அருகே தேவாரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜ் மகள் காவ்யா (வயது 18). தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது தேர்வு எழுதி முடித்துள்ளார். சம்பவத்தன்று காவ்யா கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் காவ்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் டி.மூணாண்டி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன் கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் மகள் மோனிகா (வயது 16). தந்தை இறந்து விட்டதால் தாய் லெட்சுமியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மோனிகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். கிடைக்க வில்லை.
மோனிகாவின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் குமரேசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோனிகாவை தேடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.
இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் அருகேயுள்ள கரும்பாலையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 22). இவர் சக்கிமங்கலம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார்.
இதையடுத்து அவர் சிறுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தார். ஆனாலும் அவர்கள் முத்துப்பாண்டிக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் முத்துப்பாண்டி சம்பவத்தன்று நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்தனர்.
அப்போது முத்துப்பாண்டி சிறுமியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்னுடன் வா’ என்று அழைத்து உள்ளார். அதற்கு சிறுமிக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து முத்துப்பாண்டி வீட்டில் இருந்த தாய்-சகோதரியை அடித்து உதைத்து சிறுமியை கடத்திச் சென்று விட்டாராம்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் ஊமச்சிக்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கவிதா வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.
அவரை பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் மாரியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 8-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற என் மகள் கவிதா மீண்டும் வீட்டுக்கு வலவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும் என கூறி உள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதத்தான். இவரது மனைவி ஜானகி(வயது47). இவர்களுக்கு 2 மகன்களும், பேச்சியம்மாள்(19), சீதா லெட்சுமி(17) என 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது. தற்போது திருமணம் வேண்டாம். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாகவும் அவரது மகள் கூறினார். இந்த நிலையில் நேற்று தனது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். வீட்டில் 2 மகள்கள் மட்டும் தனியாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தாயார் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த 2 மகள்களும் மாயமாகி இருந்தனர்.
அதிர்ச்சி அடைந்த தாயார் தனது மகள்களான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இதையடுத்து தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான அக்காள்- தங்கையான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.
மேலும் அவர்கள் எதற்காக வீட்டை விட்டு சென்றனர்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).
இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.
இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
பெற்றோர் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்றதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனை பெற்றோரும் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
சிறுமிக்கு வயிறு பெரிதாக காணப்பட்டது. இதனை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர் உடனே சிறுமியை ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருவை கலைக்க முடியுமா? என டாக்டர்களிடம் கேட்டனர். நிலைமை கைமீறியதால் அதற்கு சாத்தியம் இல்லை என மறுத்து விட்டனர்.
இதனிடையே அந்த சிறுமிக்கு ஆபரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மைனர் சிறுமி என்பதால் பிறந்த குழந்தை மதுரையில் உள்ள காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது. அந்த சிறுமி விருதுநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என தெரிய வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் அசன் மைதீன். இவரது மகள் ஆமீனா (வயது21). இவர் நெல்லையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு வந்த ஆமீனா வேலைக்கும் செல்ல வில்லை. மாலையில் வீடு திரும்பவும் இல்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடினார்கள். அங்கும் ஆமீனாவை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நேற்று ஆமீனாவின் தாயார் உம்மு சுலைகா, கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆமீனாவை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்